
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த இப்பிரச்சினையை போக்குவரத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர், உரிய சுற்றறிக்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார்.