
பெருந்தோட்டப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் அடுத்த வருடத்திற்குள் நிரப்பப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கல்வித்துறையில் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.