
கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் சந்தேக நபர் கொல்லப்பட்டார்.
இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ஹொரன்பலெல்ல, மஹகம பிரதேசத்தில் சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளதோடு அங்கு சந்தேகநபர் T56 துப்பாக்கியால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், அதிகாரிகளின் பதில் தாக்குதல்களால் சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.
மேலும், சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த நபர் மபோடல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.