
புதிய போட்டிப் பரீட்சை நடத்தாமல் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிபர் சேவை மூன்றாம் தரத்திற்கான நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 4 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 2019 ஆம் ஆண்டு நடத்தப்படும் பரீட்சையின் அடிப்படையில் உரிய பதவிகளை நிரப்புவதன் மூலம் எந்தவொரு தரப்பினருக்கும் பாரபட்சம் ஏற்படாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளயஹோடு குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல வழிகளை அவர் பரிந்துரைத்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.