
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ராஜித சேனாரத்ன, வசந்த யாப்பா பண்டார, குமார வெல்கம ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும், சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமகி ஜன பலவேகய இது தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரித்துள்ளது.