
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களின் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் கடந்த 18ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.