
ஹொரணை அங்குருவத்தோட்ட ரத்மல்கொட பிரதேசத்தில் வசித்து வந்த 03 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் தாய் மற்றும் சிசுவின் சடலங்கள் இன்று வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 24 வயதான ஒரு பிள்ளையின் தாயும் அவரது 11 மாத குழந்தையும் உயிரிழந்துள்ள நிலையில் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் வசித்த வீட்டில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று இவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதோடு . சடலங்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்ட போது விலங்குகள் சடலங்களை சேதப்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவிகின்றனர்.