
தெரிவு செய்யப்பட்ட ஊடகம் ஒன்றிற்கு தடை விதிக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் தீர்மானத்திற்கு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் இத்தகைய தடை மூலம் ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதை குறித்த முடிவு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடக நிறுவனமொன்றை இலக்கு வைத்து இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதோடு சுதந்திர ஊடகம் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளில் தாம் பலமாக நம்பிக்கை கொள்வதாகவும், அதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.