
சர்வகட்சி மாநாட்டில் இணக்கம் காணப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.