
4 பேர் கொண்ட குடும்பம் குறைந்த செலவில் வாழ மாதந்தோறும் 60,000 ரூபாய் தேவைப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது விபரங்களை அறிய இதுவரை வெளியிடப்படவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறைந்த பட்ச தேவை அதிகரிப்பதன் காரணமாக சிலர் தமது சுகாதார மற்றும் கல்விச் செலவுகளை குறைத்துக் கொள்வதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டினார்.