
விவசாயத்துறையை நவீனமயமாக்குவதன் ஊடாக இலங்கையில் விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்ப்பதற்கு செயலணியொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் விவசாயம், பெருந்தோட்டங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களை இணைத்து தனியார் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த செயலணி ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விவசாயத்துறையின் நவீனமயமாக்கல்” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.