
பால் உற்பத்திக்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பால் பவுடர் பயன்படுத்துவதுஆரோக்கியமற்றது என்று மருத்துவர்கள் காட்டியுள்ளதாகவும் இதுவரை 337 கால்நடை அலுவலகங்களில் திரவ பால் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில்முனைவோர் திரவ பால் விநியோகம் செய்ய தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் பால் உற்பத்திக்குத் தேவையான நிலம் கண்டறியப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.