
கிழக்கு சிரியாவில் ISIS தீவிரவாதிகள் இராணுவ பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 23 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 10க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது
மேலும், இந்த ஆண்டு ISIS தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலாக குறித்த தாக்குதல் கருதப்படுவதோடு இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு (SOHR) தெரிவித்துள்ளது.
அத்தோடு, அண்மைய வாரங்களில் சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ISIS உறுப்பினர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.