
நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலையீட்டின் ஊடாக, குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு பௌசர் ஊடாக நீர் வழங்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், சுத்திகரிக்கப்பட்ட நீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறும் தேசிய நீர் போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், ஆற்று நீரில் கடல் நீர் சேர்வதால் ஏற்படும் உப்புத்தன்மையை போக்க உப்பு தடுப்புச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக நீரை கட்டுப்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்தார்.