
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிட்டிபன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.