
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடையை நீக்குவது குறித்து தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடை முதலில் நீக்கப்படும் என தாம் எதிர்பார்க்கப்பதாக குறிப்பிட்டுள்ளார்.