
கடந்த காலத்தில் நாட்டு மக்களும் சந்திக்க நேர்ந்த துரதிஷ்டமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் சகல துறைகளிலும் நவீனமயமாகி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரம்பரிய அரசியல் கோஷங்களால் தற்போது எந்தப் பயனும் இல்லை எனவும், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை தொடர்பான அதிகாரிகள் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் தொடர்பான ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்ததுடன் குறித்த இலக்கை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேம்படுத்துவதற்கான முறையான திட்டம் உடனடியாக முன்வைக்கப்பட்டால் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.