
செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதல் படி 2024 இல் எடுக்கப்படும் எனவும். எப்பாவல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடு பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் எந்தவித நெருக்கடிகளும் ஏற்படாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.