
தற்போதைய வரட்சியான காலநிலை மற்றும் பயிர் சேதம் காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்பது குறித்து அவசரமாக ஆராய்ந்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தமக்கு வழங்குமாறு விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக யாழ் பருவம் தோல்வியடைந்தால் இன்னும் சில மாதங்களில் பாதிப்பு ஏற்படும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளதுடன் தற்போதுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அரிசியை இறக்குமதி செய்ய அதிகாரிகள் திட்டமிட வேண்டாம் என அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.