
அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பில் சுமார் 20,000 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி விஜயரத்ன தெரிவித்துள்ளதோடு குறித்த விடயங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடடார்.