
பிரமிட் என்பது வியாபாரம் அல்ல, அது ஒரு மோசடி என்றும், அது தற்போது சமூகத்தின் பரவலாக மாறியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வர்த்தகங்களை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ருவன்வெல்ல – யதன்வல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில், பிரமிட்கள் வியாபாரம் அல்ல, மோசடி என்ற செய்தியை மக்களிடம் பரப்புவது மிகவும் அவசியம் என் தெரிவித்தார்.