
வடகொரியா தனது ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கிம் ஜாங் உன்னின் அறிவுறுத்தலின் பேரில் வடகொரியா ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதோடு ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் பிற அணு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வடகொரியாவின் தொழிற்சாலைகளை கிம் ஜாங் சமீபத்தில் பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆண்டுதோறும் இராணுவ பயிற்சிக்கு தயாராகி வரும் பின்னணியில் வடகொரியாவின் குறித்த உற்பத்தியின் அதிகரிப்பு தெரியவந்துள்ளது.
மேலும், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களைப் பெற ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.