
காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைக்காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் வெலிகம, அஹங்கம மற்றும் விடிகம பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே வெலிகம மற்றும் திக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 19, 23 மற்றும் 30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் சிறைச்சாலை காவலரை தாக்க வந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.