
களுத்துறை பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரை களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதன்படி, கட்டுகுருந்த கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமியே 30 நிமிடம் குறித்த இடத்தில் மாட்டியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட பாடசாலையின் கழிப்பறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே உள்ள குறுகிய இடத்தில் குறித்த மாணவி சிக்கிக் கொண்டதாகவும் ஸ்தலத்திற்கு வந்த களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் கருவியின் உதவியுடன் இரு சுவர்களையும் தள்ளி சிறுமியை பத்திரமாக அங்கிருந்து மீட்டதாகவும் மேலும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.