
இந்த நாட்டில் உள்ள சுமார் 5000 வைத்தியர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பேச்சாளர் கலாநிதி சம்மில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளதோடு கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த கடந்த ஆண்டில் 270க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.