
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகல் கொடல்லயாய பகுதியில் வீடொன்றில் 65 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வலஸ்முல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, எகொடபெத்த, வடவதெனிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு கடந்த 12 ஆம் திகதி குறித்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் .
இதேவேளை, கடந்த 12ஆம் திகதி துங்கலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
படல்கம, கெஹெலல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபரிடம் இருந்து குற்றச் செயலைச் செய்வதற்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர் இன்று மிகோமுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.