
நலன்புரி நன்மைகள் சபையின் புதிய தலைவராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஜெயந்த விஜேரத்னவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நலன்புரி நன்மைகள் சபைத் தலைவராகப் பணியாற்றிய பி. விஜயரத்ன குறித்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.