
தங்காலை மற்றும் திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தங்காலை, குடுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு அவர் தனது வீட்டின் அருகே மற்றவர்களுடன் தங்கியிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய துப்பாக்கிச் சூடு திக்வெல்ல, போடரகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அங்கும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன்அவ்விடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினர் அவர்களில் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.