
பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் பங்கேற்காத அரச அதிகாரிகள் தொடர்பிலான அறிக்கையை மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
எனவே, ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு அரச அதிகாரிகள் வராத போது பிரதேச செயலகம் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.