
மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்ப்பானது இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவித் தொகையை 25,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கான உதவித் தொகை 15,000 ரூபாயில் இருந்து 35,000 ரூபாயாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் இரண்டு இலட்சத்து 50,000 ரூபா உதவித்தொகை 05 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை சீரமைக்க வழங்கப்பட்ட ரூ.150,000 உதவித்தொகை ரூ.250,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்க வழங்கப்படும் உதவி ரூ.100,000 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.