
உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் சமூகத்தின் 25% பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த இளைஞர் அதிருப்தி ஆணைக்குழு முன்னர் உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களுக்கு 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த போதிலும், கடந்த காலங்களில் அந்த வாய்ப்பு பறிபோனதாக தெரிவித்தார்.
அத்தோடு, மீண்டும் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் இளைஞர் சமூகத்தின் பங்களிப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.