
நாட்டில் நிலவும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டை விட்டு வெளியேறும் விசேட வைத்தியர்களை நாட்டிலேயே தங்க வைப்பதற்கு தெளிவான ஏற்பாடு இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விசேட வைத்தியர் பற்றாக்குறையால் வைத்தியசாலை அமைப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்கு 7 வருடங்களுக்கு மேலாகும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்தியதோடு கடந்த வருடங்களை விட அதிகளவான வைத்தியர்களை விசேட பயிற்சிக்காக இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, விசேட பயிற்சி பெறும் வைத்தியர்கள் 5 வருடங்கள் நாட்டில் சேவையாற்ற வேண்டும் என்ற புதிய நிபந்தனை கொண்டுவரப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்துள்ளது.