
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொருளாதாரப் போக்குகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சகல காரணிகளிலும் கவனம் செலுத்தி பாதுகாப்பை மீளாய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை கிடைத்த பின்னர் நவீன பாதுகாப்புக் கொள்கைகளை வகுக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
புஸ்ஸாவிலுள்ள கடற்படை தொண்டர் படையின் மேம்பட்ட கடற்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.