
இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தலின் போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குழுவில் நிதி அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் அடங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதுடன் இக்குழு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குழு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குத் தேவையான வரிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இடையேயான வரி மேலாண்மை குறித்து ஆராயம் எனவும் தேய்விக்கப்பட்டது.