
இலங்கை சுங்கத்தின் பெயர் மற்றும் இலச்சினையை தவறாகப் பயன்படுத்தி சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவ்வாறான மோசடியான நபர்கள் மற்றும் தனிநபர் குழுக்களால் ஏமாற வேண்டாம் என இலங்கை சுங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை இலங்கை சுங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.