
இஸ்ஸதீன் ஹம்தான்
கழகத்தின் 33 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக பாலமுனை மண்ணின் பரசவப்பெருவிழா நேற்று(19) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் விஷேட அதிதிகளாக முன்னாள் தவிசாளர் SMM.ஹனீபா JP SLPS அவர்களும் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி MA.அன்சில் அவர்களும் மற்றும் பாடசாலை அதிபர்கள் கழகத் தலைவர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டுக் கழகத்திலிருந்து பல்கலைக்கழகம், தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் தேசியக்கல்விக்கல்லூரிக்கு தெரிவானவர்களும் பாலமுனை மண்ணிலிருந்து தெரிவாகிய மகப்பேற்று வைத்தியர் AL.சுதைஸ் அகமட், பொறியியல் துறைக்கு தெரிவாகிய தற்போது கட்டார் நாட்டில் பொறியியலாளராக கடமையாற்றும் YL.கியாஸ், யூனானி வைத்தியராக கடமையாற்றும் நழீம் MBUMS ஆகியோர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் பாலமுனையில் ஸஹ்வா அறபிக்கல்லூரி மற்றும் மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியிலிருந்து வெளியான ஹாபிழ்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு கழகத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட கழக உறுப்பினர்கள், கழகத்தின் இளையோர்கள் ஆகியோர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் பாலமுனை Happy Kids முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் ஏறாவூர் மண்ணிலிருந்து வருகை தந்த சகோதரரின் இஸ்லாமியப் பாடல்களும் அரங்கேறின.