
உக்ரைனுக்கு F16 போர் விமானங்களை வழங்க நெதர்லாந்து மற்றும் டென்மார்க் முடிவு செய்துள்ளன.
இதன்படி, ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்துவதற்கு உக்ரைன் போர் விமானங்களைக் கோரிய நிலையில், குறித்த F16 போர் விமானங்களை வழங்கவுள்ளதாகவும் இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அத்தோடு, உக்ரைனுக்கு இதுபோன்ற போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக நெதர்லாந்து மற்றும் டென்மார்க் தெரிவித்துள்ளன.
மேலும், உக்ரைன் விமானப்படைக்கு உரிய ஜெட் விமானங்களை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாக நெதர்லாந்து தெரிவித்துள்ளதுடன் உக்ரைனுக்கு 19 F16 போர் விமானங்களை வழங்குவதாக டென்மார்க் கூறியுள்ள போதிலும் .நட்பு நாடுகளுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக நெதர்லாந்து தெரிவித்துள்ளது.