
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் வகுத்த நிபந்தனைகளில் 35 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, IMF திட்டத்தின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டம் தொடர்பான புதிய அறிக்கையை வெளியிடுவதன் மூலம் குறித்த விடையம் தெரியவந்துள்ளது.
அத்தோடு, உண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, IMF திட்டம் தொடர்பான 57 சதவீத நிபந்தனைகள் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அரசாங்கம் 35 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அறிக்கையின்படி, நிதிக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி இலங்கை முன்னேறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையின்படி, செப்டெம்பர் மாதம் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 சதவீத நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாதம் ஒன்றுக்கு 18 நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உண்மை ஆராய்ச்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.