
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, துபாயில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான பலப்பிட்டியே டில்ஷான் மற்றும் ரத்கம விதுர ஆகிய இருவரே இந்தக் கொலைக்கான ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர் புல்முடு கடற்படை முகாமில் கடமையாற்றும் நபர் என தெரியவந்துள்ளதாகவும் சந்தேக நபர் பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அவரிடம் இருந்து 20 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இரவு தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நிராயுதபாணி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களினால் படகு ஓட்டுநராக பணியாற்றிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.