
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி இங் ஹென்னை சந்தித்துள்ளார்.
இதன்படி, புவிசார் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் சிறிய கடல் நாடுகளுக்கான பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் இருவரும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ஹலிமா ஹகோபை முதன்முறையாக சந்தித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் நாட்டின் பல உயர்மட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரின் நிலைத்தன்மை மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் ஹூ ஹை யென் அவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.