
வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, தனிநபர் வருமானத்திற்கு அறவிடப்படும் வரி விகிதங்களை கீழே வெளிப்படுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
அத்தோடு, தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, குறுகிய காலத்தில் அரச அல்லது தனியார் துறையின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களின் வரிச்சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு உணவுப் பாதுகாப்பு இல்லாத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்தார்.