
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, உயிரிழந்த நபர் இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மலையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.