
பல்வேறு நோய்களால் குழந்தைகள் உயிரிழப்பதாக சிலர் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் சுகாதார சேவையை செயலிழக்கச் செய்வதற்காக சிலர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 மாதக் குழந்தை கடந்த 19ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.