
கடைகளில் உள்ள பொருட்களில் பிரச்சனைகள் இருப்பதாக நுகர்வோர் அதிகாரசபையிலிருந்து வணிகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தால், 1977 ஹாட்லைன் எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ புகார் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோர்அதிகாரசபையினுடைய அதிகாரிகள் எனக் கூறி வர்த்தகர்களிடம் இருந்து பணம் பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இது நுகர்வோர் விவகார அதிகார சபையை சங்கடப்படுத்தும் நோக்கில் ஒரு நபர் அல்லது சிலரால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கை என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.