
சிறுநீரக நோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தபால் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உரிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பொது திறைசேரி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 2,684 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் இந்த நன்மையை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 35,000 பேருக்கும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.