
வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த நபரொருவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 11,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை குறித்த காலி, மாகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் வைத்திருந்ததாகவும் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாகல்ல, காலி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.