
187 கட்டுநாயக்க விமான நிலையம் – கொழும்பு சொகுசு பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.
இதனால் கட்டுநாயக்க விமான நிலையம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் ஆகிய பகுதிகளுக்கு வரும் பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாஎமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் தீர்க்கப்பட்ட வீதிப் பிரச்சினைக்கு கம்பஹா மாவட்ட 01 அலுவலகத்தின் இயங்கும் முகாமையாளர் தவறான தகவலை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரிடம் முன்வைத்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கம்பஹா மாவட்டத் தலைவர் லம்பேர்ட் மதுரகே தெரிவித்தார்.
குறித்த விடையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை மாலை 04.30 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், நாளை பிற்பகல் முதல் வழித்தட எண் 265 மினுவாங்கொடை-கொழும்பு, பாதை இலக்கம் 187 கட்டுநாயக்க- கொழும்பு சாதாரண பேருந்துகள், பாதை இலக்கம் 240 நீர்கொழும்பு-கொழும்பு சாதாரண பேருந்துகள், பாதை இலக்கம் 187 ஜா-எல-கொழும்பு மற்றும் கொல்பொம்பூகம- போன்ற பகுதிகளில் இயக்கப்படும்.பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.