
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்குவிண்ணப்பித்த 15 இலட்சம் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 08 இலட்சம் குடும்பங்களுக்கான பணம் நாளை வங்கிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேவையான உறுதிப்படுத்தல்களை மேற்கொண்டதன் பின்னர், எஞ்சிய நிவாரணப் பயனாளி குடும்பங்களுக்கும் பணம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஜூலை மாதத்திற்கான பணம் நிவாரண பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.