
மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படாத மற்றும் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிதி நிறுவனத்திலோ அல்லது வங்கியிலோ தமது பணத்தை வைப்பிலிட வேண்டாம் எனவும் நாடளாவிய ரீதியில் பிரமிட் மோசடி செய்பவர்கள் ஏழை மக்களை மிக நுணுக்கமாக ஏமாற்றி இவ்வாறான வியாபாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரமிட் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய நுண்நிதி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான பணிப்புரை தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நுண்கடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அவற்றால் பயன்பெறும் குழுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.