
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான தொழிநுட்பப் பீட மாணவர்களின் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு (28) செய்வாய்க்கிழமை கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, குறித்த நிகழ்வில் பகுதித் தலைவர் இஸட்.ஏ.ஜின்னா, உதவிப் பகுதித் தலைவர் எம்.எச். அன்ஸாத் மற்றும் பாட ஆசிரியரான ஏ.கே.எம். றினோஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.